×
Saravana Stores

பிளஸ் 1 தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

 

சிவகங்கை, ஜூலை 28: அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜூன், ஜூலை 2023ல் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியல்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆக.1 மற்றும் ஆக.2 ஆகிய இரண்டு நாட்கள் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல். மறு கூட்டல் இதில் ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.275 செலுத்த வேண்டும். மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடம்(ஒவ்வொன்றிற்கும்) ரூ.305, பிற பாடங்களுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும்.விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிளஸ் 1 தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Directorate of Government Examinations ,
× RELATED நாளை உங்களைத் தேடி திட்டம்