×

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் உணவு சரியில்லை என்று கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெருவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு, கலை மற்றும் அறிவியல் இளங்கலை, முதுகலை பட்ட மேற்படிப்பு படிக்கும்  மாணவர்கள் 275 பேர் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் கடந்த சில நாட்களாக உணவு சரி இல்லை என்று கூறியும், தொடர்ந்து சரியில்லாத உணவை வழங்குவதை கண்டித்தும் நேற்று இரவு 7 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த துணை ஆட்சியாளர் ஹேமலதா, ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு கணேசன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உணவு, குடிநீர் பிரச்னை குறித்து மாணவர்கள் கூறினர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு தரமான உணவும் குடிநீரும் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர். தண்டையார்பேட்டை ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அனைத்து வகைகளிலும் வடகிழக்கு...