×

பாலக்காட்டில் நோயாளிகளுக்கு வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

பாலக்காடு, ஏப். 18: பாலக்காடு மாவட்டத்தில் படுக்கை நோயாளிகளுக்கு வீடுகள் தோறும் சென்று இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மின்த்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன்குட்டி நேற்று தொடங்கி வைத்தார். பாலக்காடு மாவட்டத்தில் படுக்கை நோயாளிகளுக்கு வீடு தோறும் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. வயதான மூதாட்டியினர், முதியோர் மற்றும் படுக்கை நோயாளியினருக்கு வீடுகள்தோறும் ரேஷன் பொருட்கள் ஆட்டோவில் வழங்கும் திட்டம் பாலக்காடு மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கேரள மின்த்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன்குட்டி வடகரப்பதி கிராமப்பஞ்சாயத்து அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தினால் வடகரப்பதி கிராமப்பஞ்சாயத்தில் 21 குடும்பத்தினர் பயனடைய உள்ளனர். சித்தூர் தாலுகா உணவுத்தானிய வழங்கல் அதிகாரி பீனா, கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பேபி, வளர்ச்சித்திட்டக்குழு தலைவர் கணக்கன், உறுப்பினர்களான சசிகுமார், சாண்டி ஆனீஸ், எஸ்தர் பிரன்சி, ஐஸ்வரியா, நாராயணி ஆகியோர் உட்பட் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுபோன்று பாலக்காடு மாவட்டத்தில் தாலுகா வாரியாக படுக்கை நோயாளியினருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. வரும் 20ம் தேதி பாலக்காடு தாலுகாவிலும், 18 ம்தேதி ஆலத்தூரிலும், ஒத்தப்பாலம், பட்டாம்பி ஆகிய 3 தாலுகாவிலும், 19ம் தேதி மன்னார் காட்டிலும் நடைபெறவுள்ளது என பாலக்காடு மாவட்ட உணவுத்தானிய வழங்கல் அதிகாரி அறிவித்துள்ளார்.

The post பாலக்காட்டில் நோயாளிகளுக்கு வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Power Minister ,Palakkad ,electricity ,
× RELATED பாலக்காடு நகராட்சி 6வது வார்டில்...