×

பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகள் ஊக்கப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்: தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

 

திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் வகையில் செயல்படும் விவசாயிகளுக்கு ஊக்கப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தோட்டக்கலைத் துறையின் மூலம், பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்க பாரம்பரிய காய்கறி விதைகளை உற்பத்தி செய்து பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 2023-24-ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறி விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை தேர்வு செய்து அரசு நெறிமுறைகளின்படியும், மாவட்டக்குழு ஆய்வின் படியும் முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.

ஆகையால் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியான விவசாயிகள் நேரடியாக www.tnhorticulture.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அணுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விவரங்களை வழங்கி பதிவுகளை மேற்கொண்டு பரிசுகளை பெறலாம். என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகள் ஊக்கப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்: தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Deputy Director ,Dindigul ,Dinakaran ,
× RELATED வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்க பட்டாதாரி வாலிபர்கள் விண்ணப்பிக்கலாம்