×

பாரதிராஜா உடல்நிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரிப்பு

சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நலம் குறித்து அவரது மனைவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் விசாரித்தார். பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவின் மனைவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் பேசி அவரது உடல் நலம் குறித்து விசாரித்து, சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். பாரதிராஜா விரைவில் நலம்பெற தனது விருப்பத்தை தெரிவித்தார்….

The post பாரதிராஜா உடல்நிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bharathiraja ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,
× RELATED மயிலாடுதுறையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி