×

பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு நாய்

கடலூர், மே 21: கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் வீட்டு வளாகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவரது நாய் அந்த பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு செந்தில்குமாரின் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு பாம்பின் அருகில் நாய் குரைத்துக் கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அந்த செல்லா பாம்பை பிடித்தார். பிடிபட்டது சுமார் 5 அடி நீளமுடைய நல்லபாம்பு என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த பாம்பை காப்புக் காட்டில் விட கொண்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு நாய் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sendilkumar ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்