×

பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பழநி: பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்றிரவு துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜன.28ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் பிப்.1ம் தேதி நடந்தது. கொடியேற்றம், பூவோடு வைத்தல் நிகழ்ச்சியுடன் நேற்றிரவு நடந்தது. இரவு 7.30 மணிக்கு நடந்த கொடியேற்றத்தையொட்டி மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி துவங்கி உள்ளது. பிப்.15ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கன்யா லக்னத்தில் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெறும். பிப்.16ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரோட்டத்தில் 400 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவிர வண்டி கோமாளி ஊர்வலம், பூச்சொரிதல் ஊர்வலங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்.17ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்….

The post பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Masi festival ,Palani ,Mariamman ,Temple ,Palani Mariamman Temple ,Dindiukkal District ,Palani Dandayudhapani Swami Temple ,Dinakaran ,
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...