- பள்ளி நிர்வாகக் குழு
- குளத்தூர்
- குளத்தூர் ஊராட்சி
- மேல்நிலை பள்ளி
- குலத்தூர் அரசு உயர் செகண்டரி பள்ளி
- ஜனாதிபதி
- ராம
- தலைமை ஆசிரியர்
- சர்குனராஜ்
- தின மலர்
குளத்தூர், ஜன. 9: குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ரமா தலைமை வகித்து பேசினார். தலைமை ஆசிரியர் சற்குணராஜ், ஆசிரியர் பிரதிநிதி செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கென்னடி வரவேற்றார். குளத்தூர் தனியார் கல்லூரி விரிவுரையாளர் மதன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பள்ளிகளை தூய்மைப்படுத்துதல், பள்ளி வளாகங்களுக்குள் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைத்தல், பள்ளி வளாகத்தின் அருகில் விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்களை தடை செய்தல், 12ம் வகுப்பு மாணவர்களின் உயர் கல்வியில் கவனம் செலுத்துதல், பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் இணைத்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்வது, பள்ளி முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.
The post பள்ளி மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.