×

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

 

சேலம், ஜூலை26: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.

இதில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல்வால்ட், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

19, 17, 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தனர். அப்போது தலைமை ஆசிரியர் கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள் அருள், ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொம்மியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu School Education Department ,Omalur ,Salem district ,Gandhi Stadium ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்