×

பள்ளி, கல்லூரி மாணவிகளை கடத்தி பலாத்காரம் காமக்கொடூரனை காவலில் எடுக்க முடிவு

கோவை: பள்ளி, கல்லூரி மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த ஆசாமியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் ஆத்தூர் தெடாவூரை சேர்ந்தவர் மணிமாறன் (40). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். முதல் மனைவியை பிரிந்த இவர், இரண்டாவதாக பூர்ணிமா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணியில் இருந்து கடந்த 2019ம் ஆண்டில் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் இவர், நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றினார். இரண்டாவது மனைவி, குழந்தைகளை விட்டு தலைமறைவானார்.அதன்பின், கடந்த ஆண்டு கோவை சரவணம்பட்டிக்கு வந்தார். டியூசன் ஆசிரியர் என சொல்லி வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் மாடியில் டியூசன் நடத்தி வந்தார். நடனம் மற்றும் மேஜிக் பயிற்சியும் அளித்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கணக்கு படிக்க வந்த 16 வயதான, 10ம் வகுப்பு மாணவிக்கு பாடம் சொல்லி கொடுத்தார். மாணவியின் குடும்பத்தினரிடமும் நட்பாக பழகினார். கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி மாணவியுடன் திடீரென மாயமானார்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை தேடினர். ஆனால், அவர் குறித்த எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.பல்வேறு இடங்களில் சென்று வாடகை வீட்டில் வசித்த இவர், கடந்த ஜனவரி மாதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். சுசீந்தரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நட்பாக பழகினார்.அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்தினார். இங்கு நிம்மதியாக வாழ முடியாது எனக்கூறி அவரையும் அழைத்து கொண்டு திருப்பதி சென்றார். அங்கும் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சிறிய டீ கடை ஆரம்பித்தார். தன்னிடம் டீ குடிக்க ஆள் வராத நிலையில் மாணவிகள் இரண்டு பேரிடமும் கேனில் டீ நிரப்பி கொடுத்து அதை விற்று வருமாறு அனுப்பினார்.இதில் கிடைத்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்தார். இந்நிலையில், மணிமாறன் திருப்பதியில் இருக்கும் தகவல் வந்ததும் கோவை சரவணம்பட்டி போலீசார் அங்கே சென்று 2 மாணவிகளையும் மீட்டனர். மணிமாறனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவிகள் இருவரும் மருத்துவ சோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்நிலையில், கைதான மணிமாறன் நிதிநிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றிய தகவலும், கோவையில் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம், தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி கடனாக ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. தற்போது மணிமாறன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். …

The post பள்ளி, கல்லூரி மாணவிகளை கடத்தி பலாத்காரம் காமக்கொடூரனை காவலில் எடுக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Kamakdooran ,Asami ,Salem ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்...