×

பள்ளி ஆசிரியையை உல்லாசத்திற்கு அழைத்த அரசு அதிகாரி கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 40 வயதான அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு கடந்த 2017 முதல் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை. இதுதொடர்பாக பல அதிகாரிகளை சந்தித்து கூறியும் பலன் இல்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சிறப்பு அதிகாரியும், காசர்கோடு மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் அலுவலக இளநிலை கண்காணிப்பாளருமான வினோய் சந்திரனை (43) சந்தித்து விவரத்தை கூறினார்.முதலில் மறுத்தவர், பின்னர் பிஎப் கணக்கில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வதாக உறுதியளித்துள்ளார். சில நாள் கழித்து ஆசிரியையின் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான படங்களை வினோய் சந்திரன் அனுப்பி உள்ளார். அதன் பிறகு ஆசிரியையை போனில் அழைத்தவர், பிஎப் கணக்கை சரி செய்து இருப்பதாகவும், ஒரு சில நாட்களில் கோட்டயத்திற்கு தான் வருவதாகவும், அப்போது தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி நேற்று கோட்டயத்திற்கு வினோய் சந்திரன் வந்தார்.பின்னர் ஆசிரியையை போனில் தொடர்பு கொண்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் தான் தங்கியிருப்பதாகவும், உடனே அறைக்கு வரும்படியும் கூறி உள்ளார். தனது சட்டை அழுக்காக இருப்பதால் வரும்போது ஒரு புதிய சட்டை வாங்கி வரும்படியும் அவர் கூறி உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, கோட்டயம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி வினோத்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து வினோய் சந்திரனை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.அதன்படி ஆசிரியைக்கு ஒரு புதிய சட்டை வாங்கிக் கொடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சட்டையில் வழக்கமாக ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தும் பினாப்தலினை தடவினர். அந்த சட்டையுடன் வினோய் சந்திரனை சந்திப்பதற்காக ஆசிரியை ஓட்டல் அறைக்கு சென்றார். ஓட்டல் அறைக்கு அருகிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் பதுங்கி இருந்தனர். ஆசிரியை அறைக்குள் நுழைந்தவுடன் சட்டையை அதிகாரியிடம் கொடுத்தார். சிறிது நேரத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் அறைக்குள் அதிரடியாக நுழைந்து வினோய் சந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு போலீசார் வினோய் சந்திரனை கோட்டயம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post பள்ளி ஆசிரியையை உல்லாசத்திற்கு அழைத்த அரசு அதிகாரி கைது: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kottayam, Kerala ,
× RELATED கேரளாவில் நகரசபை அலுவலகத்தில்...