×

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு

 

விருதுநகர், ஜூலை 2: பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மெட்டுக்குண்டு அரசு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லீலாவதி தலைமையில் நேற்று மனு அளித்தனர். மனுவில், மெட்டுக்குண்டு அரசு தொடக்கப்பள்ளியில் 72 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கான 4 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மற்ற 3 கட்டிடங்கள் இடிந்த நிலையில் உள்ளன.

படிக்கும் மாணவர்களுக்கு மழைக்காலத்தில் பாதுகாப்பு இல்லை. ஊராட்சி மன்ற தலைவரிடமும், கிராம சபை கூட்டத்திலும் அதிகாரிகளிடமும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. பள்ளி வளாகத்திற்கு அருகில் ஊராட்சி குப்பைகள் கொட்டி எரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர் இல்லாத நிலையில் கழிப்பறையும், பள்ளி வளாகமும் சுத்தம் செய்வதில்லை. மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை வசதி, சுகாதார வசதி செய்து தர வேண்டும். பள்ளிக்கு அருகில் குப்பைகளை கொட்டி எரிப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு appeared first on Dinakaran.

Tags : Parent Teacher Association ,Virudhunagar ,Mettukundu Government Primary School Parent Teacher Association ,president ,Lilavati ,Dinakaran ,
× RELATED தொண்டியக்காடு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்