×

பள்ளிகள் இன்று திறப்பு: குமரியில் இருந்து வெளியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் இன்று(12ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. முழுஆண்டு தேர்வுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள், படிக்கும் பகுதிக்கு கடந்த சில தினங்களாக புறப்பட்டு செல்கின்றனர். குமரி மாவட்டத்திற்கு வந்திருந்தவர்களும் புறப்பட்டு செல்கின்றனர். அவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம், அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் கடந்த சில நாட்களாக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. நேற்று அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 10, கோவைக்கு 10, மதுரைக்கு 20, திருச்சிக்கு 5 சிறப்பு பஸ்களை இயங்கியது.

இதுபோல் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் மீனாட்சிபுரம் பணிமனையில் இருந்து சென்னைக்கு 3, கோவைக்கு 1, பெங்களூருக்கு 1, கன்னியாகுமரி பணிமனையில் இருந்து கோவைக்கு 1, சென்னைக்கு 1, மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து சென்னைக்கு 2, கோவைக்கு 1 என சிறப்பு பஸ்களை இயக்கியது. இதுபோல் ரயில்களிலும் அதிக பயணிகள் சென்னைக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

The post பள்ளிகள் இன்று திறப்பு: குமரியில் இருந்து வெளியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Tamil Nadu ,
× RELATED குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?