×

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது: 40,000 ஆசிரியர்கள் பங்கேற்பு

    சென்னை: பிளஸ்1, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி 40 மையங்களில் நேற்று தொடங்கியது. முதன்மைத் தேர்வுகள் விடைத்தாள் திருத்தினர். இன்று முதல் 40 ஆயிரம் பாட ஆசிரியர்கள் திருத்துவார்கள். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படிக்கின்ற பிளஸ்1, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் 13, 14ம் தேதிகளில் தொடங்கியது. இந்த தேர்வில் மேற்கண்ட இரண்டு வகுப்புகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்கான விடைத்தாள்கள் உடனுக்குடன் அரசுத் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விடைத்தாள் முகப்பு தாள்கள் அகற்றப்பட்ட டம்மி எண்கள் போடப்பட்டு 40 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மையங்களில் ஏப்ரல் 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்று திட்டமிட்டபடி பணிகள் தொடங்கியது.

    முதல் நாளான நேற்று முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் திருத்தினர். இவர்கள் தலா 12 தாள்கள் வீதம் திருத்தினர். அதன்படி, சராசரியாக மாணவர்கள் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். இதையடுத்து, இன்று முதல் 40 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பாட வாரியாக விடைத்தாள்களை திருத்துவார்கள். அவர்கள் காலை மாலை என இரண்டு கட்டமாக தலா 12 தாள்கள் வீதம் திருத்துவார்கள். இந்த பணிகள் இம்மாதம் 24ம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு டம்மி எண்கள் நீக்கப்பட்டு உண்மையான பதிவு எண்களுக்கு மாற்றி அமைக்கப்படும். அதன்படி மாணவர் பெற்ற உண்மை மதிப்பெண்கள் பட்டியல்கள் தயாரிக்கப்படும். மே 5ம் தேதி தேர்வு முடிவும் வெளியாகும்.

    The post பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது: 40,000 ஆசிரியர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

    Tags : Chennai ,plus ,
    × RELATED கனியாமூர் மாணவி மரண விவகாரம்;...