×

பருவமழையால் வனப்பகுதி செழிப்பானது-சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை பெய்து வனப்பகுதி செழிப்பானதால் மலைகளில் இயற்கை அழகு அதிகரித்திருப்பது பார்ப்பவர்களை நெகிழ்ச்சிடைய செய்துள்ளது. பொள்ளாச்சி அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு பிறகு பல மாதமாக மழையில்லாததால், வறட்சி ஏற்பட்டு வனப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் செடிக்கொடிகள் காய்ந்தவாறு இலை உதிர்ந்து காணப்பட்டது. அதன்பின், கடந்த மே மாதத்தில் கோடை மழைக்கு வனப்பகுதியில் உள்ள மரங்களில் இலைகள் துளிர்விட ஆரம்பித்தது.இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவமழையால், வனப்பகுதி இயற்கை அழகுடன் காணப்படுகிறது. தற்போது சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு மரம் மற்றும் செடிக்கொடிகள் பச்சைப்பசேல் என்று  காட்சியளிக்கிறது. இதில், டாப்சிலிப் வனப்பகுதி செழிப்புடன் பச்சை பசேல் என்று காணப்படுவதால், இரை தேடி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது.அதிலும், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையை சுற்றிலும் மரங்கள் பச்சை பசேல் என இயற்கை அழகை மேலும் அதிகரித்துள்ளது அந்த வழியாக செல்வோரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மலைப்பாதையில் வாகனங்களில் செல்வோர், நான்காபுறமும் இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். பலரும், வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்து செல்கின்றனர். இருப்பினும், தடையை மீறி வாகனத்தை நிறுத்தி இறங்கி நடந்து செல்பவர்களை, பாதுகாப்பு கருதி வனத்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்….

The post பருவமழையால் வனப்பகுதி செழிப்பானது-சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Western Ghats ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு