×

பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதமடைந்து தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமராக்கள்; ¢ குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் சிரமம் ¢ சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜன.3: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பில்லாமல் செயலிழந்தும், சேதமடைந்தும் தலைகீழாக தொங்கும் நிலை காணப்படுகிறது. இதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சிசிடிவி கேமராக்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை கண்காணிக்க அனைத்து ஊராட்சிகளிலும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், அந்தந்த கிராம ஊராட்சிகள் சார்பாக முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டது. அவ்வகையில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் கீழ் ரோடு மாநில சாலையில் கீழ்கேட் பகுதியில் தொடங்கி ஓரிக்கை, குருவிமலை, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகறல் உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இப்படி பொருத்தப்பட்ட கேமராக்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தும், செயலிழந்தும் உள்ளதாக கூறப்படுகிறது. ஓரிக்கை, குருவிமலை, ஆற்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் தற்போது சாலையை கண்காணிக்காமல் வெவ்வேறு திசையில் திரும்பியும், தலைகீழாக தொங்கிய நிலையிலும் உள்ளன. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவிமலை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த வழக்கில், குற்றவாளிகளை கண்டறிய போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது பல சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இல்லாததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிவதில் சிரமம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்க இயலாதநிலையில் தற்போது, இந்த குடும்பம் நிர்கதியாக உள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க, ஊராட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

n பல்வேறு வழக்குகளில், குற்றவாளிகளை கண்டறிய போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது பல சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இல்லாததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
n கேமராக்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தும், செயலிழந்தும் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓரிக்கை, குருவிமலை, ஆற்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து தற்போது சாலையை கண்காணிக்காமல் வெவ்வேறு திசையில் திரும்பியும், தலைகீழாக தொங்கிய நிலையில் செயலிழந்து காணப்படுகின்றன.

The post பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதமடைந்து தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமராக்கள்; ¢ குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் சிரமம் ¢ சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...