×

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை: கமிஷனர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று மாலை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர்  கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை  காவல் எல்லைக்கு உட்பட்டு 24 தொகுதிகள் உள்ளன. அதில் 2,078 வாக்குப்பதிவு மையங்களும், அவற்றில் 11,852 பூத்களும் உள்ளன. இம்முறை 4 ஆயிரம் பூத் கூடுதலாக உள்ளன. அவற்றில் 307 பூத்கள் பதற்றமானவை என  கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 10 இடங்கள் மிகவும் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.இதுவரை மக்களின் நலன் கருதி 1300 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக இதுவரை சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 77 வழக்குகளும், 300 பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரொக்கம்  மட்டும் ரூ.2 கோடி 40 லட்சம். 12 கிலோ தங்கம். வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சிசிடிவிடி கேமரா பதிவுகளுடன் 3 ஷிப்ட் முறையில் மிக தீவிரமாக பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்  கூறினார்….

The post பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை: கமிஷனர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்