×

பணியின்போது உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

சென்னை: நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதைதொடர்ந்து பணியின் போது உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. அதை அணைக்க சென்ற போது கப்பலில் இருந்த 1,200 டன் வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி தீயணைப்போர் தியாதிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை பணியின் போது உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தீயணைப்புத்துறை இயக்குனர் பிரஜ் கிஷோர் ரவி தலைமை அலுவலகத்தில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ‘வீர வணக்க ஸ்தூபியின்’ முன்பு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து டி.ஜி.பிக்கள் சைலேந்திர பாபு, ஏ.கே.விஸ்வநாதன், சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்….

The post பணியின்போது உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Day of the Firefighters of the Divine ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...