×

பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை

 

கொள்ளிடம், ஆக.25: பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் பணித்தள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதில் கிராம ஊராட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய தகுதிகள் மற்றும் நடைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்தல், பெண்கள் இல்லை எனில் ஆண்களுக்கு வாய்ப்பளித்தல் ஒரு ஊராட்சியில் இருக்கும் பணித்தொகுப்பிற்கு 4மடங்காக பணித்தள பொறுப்பாளர் எண்ணிக்கை இருத்தல்,சொந்த ஊராட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பணித்தள பொறுப்பாளரின் தகுதிப்பட்டியல் கிராம ஊராட்சி செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தயாரிக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டியல் சரிபார்த்து ஊராட்சிக்கு வழங்குதல், தகுதியுள்ள பணித்தள பொறுப்பாளர்கள் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், நிர்ணயிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளர்கள் அந்த பணி முடியும் வரை அல்லது 100 நாள் நிறைவடையும் வரை பணித்தள பொறுப்பாளராக செயல்படுதல், 200 பணியாளர்களுக்கு மேல் பணி புரியும் நிகழ்வுகளில் கூடுதலாக ஒரு பணியாளரை பணித்தள பொறுப்பாளராக நியமித்தல், ஒரு பணிக்கு குறைந்தபட்சம் ஒரு பணிதள பொறுப்பாளர் இருக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் ஒரு பணித்தளத்திற்கு ஈடுபடுத்தப்படும் பணித்தள பொறுப்பாளர் அந்தப்பணி முடிவடைந்தவுடன் அல்லது 100 நாள் அவர் பணி செய்திருக்கும் நேர்வில் அந்த பணித்தள பொறுப்பாளர் அல்லது அவரது குடும்பத்தினர் அந்த நிதியாண்டில் வேறு எந்த பணிக்கும் பணித்தள பொறுப்பாளராகவோ அல்லது பணிகளை மேற்பார்வையிடவோ கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. ஒரு நிதியாண்டில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பணித்தள பொறுப்பார் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணித்தள பொறுப்பாளராக ஈடுபடுத்துதல் வேண்டும். மேலும் ஒரு பணித்தள பொறுப்பாளர் பணித்தளத்தில் இத்திட்ட விதிமுறைகளில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அந்த பணித்தள பொறுப்பாளரை அந்த ஊராட்சியில் பணி பொறுப்பாளராக பணி செய்ய தடை விதித்து உத்திரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Kollidam ,District Rural Development Department ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கீழமாத்தூர்,...