×

பட்டியலிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை: தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்: பாஜக முதல்வர் திடீர் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தான் முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த அனுமதியை தொடர்ந்து கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அடுத்த சில நாட்களில் முன்களப்பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.பாரத் பயோடெக் தடுப்பூசியான கோவாக்சின் ஒப்புதல் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவர்கள்,  கோவாக்சின் தடுப்பூசியானது ஆபத்தானது என்றும் அதனை நிரூபிக்க முடியும் என்றும் கூறினார். ஆனால் பிரதமர் மோடி, ‘இந்தியா தயாரித்த இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்.  இது உள்நாட்டு தயாரிப்பு கனவை நிறைவேற்றி உள்ளது. இந்திய விஞ்ஞான சமூகத்தின் திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்று தெரிவித்தார். இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அளித்த ஒரு பேட்டியில், ‘இப்போது நான் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன். பட்டியலிடப்பட்ட முன்னுரிமை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதுவரை நான் காத்திருப்பேன். முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சிவராஜ் சிங் சவுகான், சில வாரங்கள் கழித்து தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இவர் தற்போது தான் முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக  பேசப்படுகிறது….

The post பட்டியலிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை: தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்: பாஜக முதல்வர் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED 5 ஆண்டில் 150 பேரை இடைநீக்கியது போன்று...