×

படித்த வேலையற்றோருக்குமாதாந்திர உதவி தொகை

நாமக்கல், ஏப்.6: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல், 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு, அரசின் சார்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. Aஇத்திட்டத்தின் கீழ் தற்போது, 1.4.2023 முதல் 30.6.2023 வரையிலான காலாண்டிற்கு, உதவித்தொகை பெற விண்ணப்பிக்க, உரிய கல்வித் தகுதிகளை மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்கள். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ₹72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. தகுதியுடையவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்திற்கு, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் www.tnvelaivaaippu.gov.in- என்ற இணையதளம் மூலம், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

The post படித்த வேலையற்றோருக்கு
மாதாந்திர உதவி தொகை
appeared first on Dinakaran.

Tags : Namakkal ,District ,Collector ,Shreya Singh ,Dinakaran ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி