×

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்: ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை!!

கிருஷ்ணகிரி: பக்ரீத் பண்டிகையையொட்டி கரூர் குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 10,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. குறைந்தபட்சமாக ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் சுமார் 20,000 பேர் ஆட்டு சந்தையில் குவிந்தனர்.பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்பொழுது ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. பக்ரீத் பண்டிகையில் ஏழை எளிய மக்களுக்கு இறைச்சிகளை வழங்குவது வழக்கம். இதனடிப்படையில் இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாமல் ஏராளமான வியாபாரிகள் விற்பனைக்காக ஆடுகளை வாங்கிச்செல்கின்றனர்.கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் வாரம் தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதையடுத்து பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 10,000 ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இந்த ஆட்டுச்சந்தையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஆடுகள் விற்பனைக்காக வந்தனர்….

The post பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்: ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Bakrit festival ,Krishnagiri ,Karur Gundharappalli Goat Market ,
× RELATED ஏரிக்கரையில் பனை விதை நட்ட கல்லூரி மாணவிகள்