×

நெல்லை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் பூத்துக் குலுங்கும் வாடாமல்லி பூ: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் உற்சாகம்

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் வாடாமல்லி பூ பூத்துக் குலுங்குகிறது. இதற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மானூர் வட்டாரத்தில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மானூர், பள்ளமடை, பிள்ளையார்குளம், குப்பனாபுரம் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் பூ விவசாயம் முக்கியத்துவம் பெறுகிறது. கேந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பிச்சி, சம்மங்கி போன்ற பூக்களை அதிகளவில் விளைவிக்கின்றனர். இவை தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப விளைகின்றன. இவர்கள் விளவைிக்கும் பூக்களுக்கு நெல்லை, சங்கரன்கோவில் பூ சந்தைகளில் நல்ல விலை கிடைக்கிறது. அதிக தேவை உள்ள நாட்களில் பூ மொத்த வியாபாரிகள் நேரில் வந்தும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.இந்நிலையில் தற்போது இப்பகுதிகளில் வாடாமல்லி பூ பாசனம் செய்து நன்றாக விளைச்சலை தருகிறது. இங்குள்ள மலர் தோட்டங்களில் வாடாமல்லிகை பூ விளைந்து கண்களுக்கு குளிர்ச்சியாக வண்ணமயமாக காட்சி தருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வாடாமல்லி பூக்களுக்கு சரியான விலை கிடைக்காமல் இருந்தது. இதனால் பலர் இதை சாகுபடி செய்வதை தவிர்த்தனர். குறிப்பாக கொரோனா காலத்தில் பூக்களின் தேவை குறைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மீளமுடியாமல் இருந்தோம். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் வாடாமல்லி பூக்கள் விளைவித்துள்ளோம்.தற்போது இதற்கு நல்ல விலையும் கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.50க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மற்ற பூக்களின் விளைச்சலும் நன்றாக உள்ளது. குறிப்பாக பனித்தாக்கம் பெரிய அளவில் இல்லாததால் பூக்கள் விளைச்சலில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் வரும் நாட்களில் பனித்தாக்கம் அதிகரித்தால் பூ விளைச்சல் பாதிப்படையும் என்றனர்….

The post நெல்லை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் பூத்துக் குலுங்கும் வாடாமல்லி பூ: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Nellie district ,Nellai ,Manur ,Nellai district ,Dinakaran ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக...