×

நெல்லை அருகே கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்படுவதால் கடிதம் எழுதி வைத்திவிட்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்படுவதால் மனவேதனையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி கடிதம் எழுதி வைத்திவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துத்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் பொன்னாக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.முத்துக்குமார் கூலித்தொழிலாளி என்பதால் குடும்ப செலவிற்கே போதிய பணம் இல்லாமல் வறுமையில் வாடியபோதும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமமப்பட்டு பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது படிப்பிற்காக பெற்றோர் மிகுந்த செலுத்தியதை எண்ணி மாணவி மனவேதனை அடைந்துள்ளார்.இதையடுத்து நேற்று மாலை அவரது பெற்றோர் வெளியே சென்ற நேரம் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த களக்காடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்தில் போலீசார் மாணவியின் கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கல்லூரி கட்டணம் கட்ட பெற்றோர்கள் மிகவும் சிரமமப்படுவதாகவும், அதனால் பெற்றோர்களை கஷ்ட்டப்படுத்த கூடாது என்பதற்காகவும் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்லூரி கட்டணம் கட்ட பெற்றோர்கள் படும் சிரமத்தை எண்ணி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post நெல்லை அருகே கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்படுவதால் கடிதம் எழுதி வைத்திவிட்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kalakadu, Nellai district ,
× RELATED லாரி-பைக் மோதல்: காதல் ஜோடி பலி