×

நெருங்கும் பஞ்சாப் தேர்தல்!: சீக்கிய தலைவர்களுக்கு தனது இல்லத்தில் திடீர் விருந்தளித்த பிரதமர் மோடி..ஆட்சியை கைப்பற்ற புது யுக்தியோ?

டெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் முக்கிய சீக்கிய தலைவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்து அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரசில் இருந்து அண்மையில் விலக்கியவருமான அமரேந்திரசிங் தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடனும், அகாலி தளத்துடனும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற பல்வேறு யுக்திகளை பாரதிய ஜனதா பின்பற்றி வருகிறது. இதனிடையே தேர்தலுக்கு இரு தினங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முக்கிய சீக்கிய தலைவர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடியை சந்தித்த சில முக்கிய சீக்கியத் தலைவர்கள், பிரதமர் மோடி மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரதமர் மோடி அவர்களில் ஒருவர் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.டெல்லி குருத்வாரா கமிட்டி தலைவர் ஹர்மீத் சிங் கல்கா, பத்மஸ்ரீ விருதுபெற்ற பாபா பல்பீர் சிங் சீச்சேவால் உள்ளிட்டோர் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சீக்கியர்கள் மீது மோடி ஜி வைத்திருக்கும் அன்பு எங்களுக்கு நிறைய தெளிவைக் கொடுத்துள்ளது என குருத்வாரா கமிட்டி தலைவர் ஹர்மீத் சிங் கல்கா கூறினார். சீக்கியம் என் ரத்தத்தில் ஓடுகிறது, என் ரத்தத்தில் சேவை இருக்கிறது என கூறிய மோடியின் வார்த்தை, எங்கள் இதயத்தைத் தொட்டன என்று யமுனா நகர் சேவாபந்தியின் தலைவர் மஹந்த் கரம்ஜித் சிங் தெரிவித்தார். சீக்கிய மத நூல்கள், சீக்கிய குருக்கள், மொழி மற்றும் சேவையில் சீக்கியர்கள் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து மோடியைத் தவிர வேறு எந்தப் பிரதமருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என டெல்லியின் சீக்கிய மன்றத்தின் தலைவர் ரவீந்தர் சிங் அஹுஜாவும் தெரிவித்தார். சீக்கியர்களுக்காக மோடி ஜி செய்த பணி, சுதந்திரத்திற்குப் பிறகு எந்த அரசாங்கமும் இதைச் செய்யத் துணியவில்லை, எங்கள் கருப்பு பட்டியல் முடிவுக்கு வந்துவிட்டது  என பாட்டியாலாவின் இளம் முன்னேற்ற மன்றத்தின் தலைவர் பிரப்லீன் சிங்கும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் சீக்கிய குருவான ரவிதாஸின் ஜெயந்தியில் டெல்லியில் உள்ள சீக்கிய வழிபாடு தலத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தாளம் இசைத்து மக்களுடன் பிராத்தனை பாடல்கள் பாடியது குறிப்பிடத்தக்கது.       …

The post நெருங்கும் பஞ்சாப் தேர்தல்!: சீக்கிய தலைவர்களுக்கு தனது இல்லத்தில் திடீர் விருந்தளித்த பிரதமர் மோடி..ஆட்சியை கைப்பற்ற புது யுக்தியோ? appeared first on Dinakaran.

Tags : Punjab ,Modi ,Delhi ,Punjab assembly elections ,
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...