×

நெமிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது-மின்கம்பிகள் அறுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

நெமிலி : தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சுற்றியுள்ள பனப்பாக்கம், நாகவேடு, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. மேலும் மின்கம்பங்கள் மீது விழுந்த மரக்கிளைகளால் மின்கம்பங்கள் உடைந்தது. மேலும், மின்கம்பிகள் அறுந்து ஆபத்தான நிலையில் தொங்கியுள்ளதால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நெமிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது-மின்கம்பிகள் அறுந்ததால் மின்சாரம் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Nemili ,Vellore ,Ranipet ,Tiruvannamalai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆற்காடு, நெமிலி, அரக்கோணத்தில்...