×

நீலகிரி மாணவி முதலிடம்; வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: பொது கலந்தாய்வு பிப்.21-ல் துவக்கம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் கிருஷ்ண மூர்த்தி நேற்று வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பூர்வா ஸ்ரீ 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த புஷ்கலா 199 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சார்ஜிங் 198.75 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், அரசுப் பள்ளியில் படித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா 193.33 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்ட் எடிசன் 189.68 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராம் பிரசாத் 189.99 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனுபா 200-க்கு 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 190.03 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் சங்கர் 189.99 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தார். சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 11-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14,15 ஆகிய தேதிகளில் தொழில்முறை கல்வி பிரிவினருக்கும், 17 மற்றும் 18-ம் தேதி அரசு பள்ளிகளில் படித்த 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவினருக்கு நடக்கிறது. பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கிறது. பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்….

The post நீலகிரி மாணவி முதலிடம்; வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: பொது கலந்தாய்வு பிப்.21-ல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Agriculture University ,Coimbatore ,Tamil Nadu Agricultural University ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...