×

நீர் ஓடைகளை ஆக்கிரமித்து தனியார் மின் கம்பங்கள்: அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு

திண்டுக்கல், ஏப்.11: நீர் ஓடைகளை ஆக்கிரமித்து ஊன்றப்பட்டுள்ள தனியார் சோலார் மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கோரி திண்டுக்கல் மேற்கு தாலுகா அகரம் அருகே காமாட்சிபுரம் காலனி பொதுமக்கள் கலெக்டர் விசாகனிடம் மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரின் அருகே ராமையா கவுண்டன் குளம் உள்ளது. இந்தக் குளம் கிராம மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. குளத்தின் மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் இங்குள்ள தனியார் நூற்பாலை நிர்வாகம் சூரிய ஒளியின் மின்சாரம் தயாரிப்பதற்காக குளத்தின் நீர் வழிப் பாதைகளை அடைத்து கம்பம் அமைக்கிறது. இதனால் வெள்ளக் காலங்களில் குளத்தில் உள்ள தண்ணீர் அனைத்தும் வயல் வெளிகளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும். கிராம மக்கள் அவதிப்படுவார்கள். கம்பம் ஊன்றுவதை தடுக்க சென்ற கிராம மக்களை மில் நிர்வாகத்தினர் மிரட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post நீர் ஓடைகளை ஆக்கிரமித்து தனியார் மின் கம்பங்கள்: அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்...