×
Saravana Stores

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை மஞ்சளாறு அணையில் பாசனத்திற்கு உபரிநீர் திறப்பு

*சோத்துப்பாறை அணை நீர்மட்டமும் உயர்வு*பெரியகுளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிபெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப்பாறை அணையில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மொத்த உயரம் 57 அடி. மேற்குத் ெதாடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயரும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 3 நாட்களாக கனமழையால் பெய்து வருகிறது. நேற்று காலை முதல் நீர்வரத்து துவங்கிய நிலையில் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தானது அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு வரும் 240 கன அடி நீரும் உபரிநீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றை கடக்கவுவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.* பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் 126.28 அடி உயர சோத்துப்பாறை அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கி 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 120.37 அடியாக உள்ளது. தற்பொழுது அணைக்கு நீர்வரத்தானது 33 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 90.30 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் குடிநீருக்காக 3 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆவியாகி போன நீரோ மேகமாகும், மேகநீரும் கீழ வந்து அருவியாக, நதியாக, ஓடையாக ஓடி அணைகளை வந்தடையும். அங்கிருந்து கண்மாய், குளம் போன்ற நீர்த்தேக்கங்களில் தேங்கி, கால்வாய் வழியாக விளைநிலங்களுக்கு சென்று விவசாயத்திற்கு பயன்பட்டு நமக்கு நவதானியங்களை தரும். அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இந்த மழைநீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் விவசாய பணிகள் படுஜோராக நடந்து வருகிறது,’’ என்றனர்….

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை மஞ்சளாறு அணையில் பாசனத்திற்கு உபரிநீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sothuparam ,Periyakulam ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே கடைகளின் பூட்டை...