×

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளியுங்கள்!: நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!!

டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னதாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் வருகை தந்தார். 75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் என குடியரசு தலைவர் உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் உரையை தொடங்குவதற்கு முன்பாக தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து முழக்கங்களும் எழுப்பப்பட்டது. நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் உயிரிழக்க நேர்வதாகவும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வேதனை தெரிவித்தார்.  …

The post நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளியுங்கள்!: நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Delhi ,President ,DMK alliance ,Parliament ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு