×

நீட் தேர்வை எதிர்த்து தமிழக முதல்வர் நிச்சயம் வெற்றி பெறுவார்: கனிமொழி பேட்டி

சென்னை: திருத்தணி மற்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், அகரமேல் மற்றும் மேல்மணம்பேடு ஆகிய ஊராட்சிகளில் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 5 உயர் கோபுர மின் விளக்குகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார். பின்னர் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நினைவு நாளையொட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் பங்கேற்றார்.இதையடுத்து எம்.பி.கனிமொழி அளித்த பேட்டியில் கூறியதாவது:  கலைஞரின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய ஆட்சியாகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய ஆட்சியாகவும், மக்களை மகிழ்விக்க கூடிய தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. நீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் சட்டத்தை பாஜ கொண்டு வந்தது. அதனால், அவர்கள் சட்டமன்றத்தை புறக்கணிப்பார்கள். நாம் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். எதிர்கட்சியாக இருந்தபோதும் பதிவு செய்துள்ளோம். நீட்தேர்வை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெற்றிபெறுவார். மாணவர்களின் மரணம் வருத்தம் அளிக்கிறது. நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். நீட் தேர்வை ரத்து செய்வதில் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம்.ஒன்றிய அரசு இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் இதுவரை பெண்களுக்கான இட ஒதிக்கீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவிலை. பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக தவிர எந்த கட்சியும் திட்டங்களை செயல்படுத்தவில்லை.  என பேசினார்….

The post நீட் தேர்வை எதிர்த்து தமிழக முதல்வர் நிச்சயம் வெற்றி பெறுவார்: கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Thiruthani ,Poonthamalli Naval Union ,Agaramar ,Malmanambade ,Nadu CM ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...