×

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்றாங்கால் தயார்படுத்தும் பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடிக்கு விதை இட நாற்றாங்கால் சமன் செய்யும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கர்களில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர். கடந்த ஆண்டு ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் நடந்து வந்தது. அப்போது 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் மும்முரமாக தொடங்கியுள்ளது. இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் நீடாமங்கலம் தாலுக்கா பகுதியில் இந்த ஆண்டு சுமார் 2,500 ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடி மும்முரமாக செய்து வருகின்றனர். கானூர் அன்னவாசல், ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை விதைப்பு விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடிக்கு விதை தெளித்து வருகின்றனர். இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் உள்ள வயலில் நேற்று குறுவை சாகுபடிக்கு விதை இடுவதற்காக பெண் விவசாய தொழிலாளர்கள் நாற்றங்காலை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்….

The post நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்றாங்கால் தயார்படுத்தும் பணி appeared first on Dinakaran.

Tags : Needamangalam Agricultural Sciences ,Station ,Nidamangalam ,Needamangalam Agricultural Sciences Center ,-Cultivation Seed ,Needamangalam ,Agricultural Sciences Station ,Dinakaran ,
× RELATED விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க...