×

நிலக்கரி ஊழல் வழக்கு மம்தாவின் மருமகனிடம் 8 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜி, பல நூறு கோடி ரூபாயை சட்ட விரோதமாக பெற்று உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அவர் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கும், அவரது மனைவி ருசிச்ராவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதை எதிர்த்து 2 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை கடந்த வாரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை நேரில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று அபிஷேக் மனைவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது….

The post நிலக்கரி ஊழல் வழக்கு மம்தாவின் மருமகனிடம் 8 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mamta ,New Delhi ,Mamta Panerjea ,Trinamul Congress ,Mamta Panerjhi ,West Bengal ,Dinakaran ,
× RELATED மம்தாவுக்கு எதிராக ஆளுநர் அவதூறு வழக்கு: 10ம் தேதி விசாரணை