×

நினைத்தாலே இனிக்கும் கிறிஸ்துமஸ் கேக், குக்கீஸ்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே சாக்லேட்டும், கேக்கும், குக்கீஸும்தான் நம் நினைவில் இனிக்கும். அதிலும் இது ஹோம் மேட் சாக்லேட்களின் காலம். விதவிதமான சாக்லேட் மற்றும் குக்கீஸ்களை வீட்டிலிருந்தே சமைப்பது இன்று சுலபம். இதனால், பட்ஜெட்டும் கையைக் கடிக்காது, சுவையும் நம் விருப்பம் போல் இருக்கும், ஆரோக்கியமும் அரவணைக்கும். இதோ நமக்காக சுவையான ஹோம் மேட் கேக் மற்றும் குக்கீஸ்களை செய்துகாட்டுகிறார் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த திவ்யா.செர்ரி கேக்என்னென்ன தேவை?மைதா – 150 கிராம், சர்க்கரை – 100 கிராம், வெண்ணெய் – 100 கிராம், முட்டை – 2, பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், செர்ரி – 100 கிராம், உப்பு – 1 சிட்டிகை.எப்படிச் செய்வது?மைதா, பேக்கிங் பவுடர் சலித்து எடுத்து வைக்கவும். செர்ரியை சிறிது சிறிதாக கட் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் பீட் செய்யவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, முட்டை, உப்பு சேர்த்து பீட் செய்யவும். பிறகு சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து அனைத்தையும் ஒன்று சேரும்படி ஒரே பக்கமாக பிரட்டவும். பின்பு செர்ரியை சேர்க்கவும். பேக்கிங் பேனை வெண்ணெய் மற்றும் மாவு தடவி ரெடி செய்து அதில் இந்த கலவையை கொட்டவும். அவனை ப்ரீ-ஹீட் 2000°C- 10 நிமிடம் செய்து பேக்கிங் பேனை அவனில் 3000°C- 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஆறியதும் பேனில் இருந்து கேக்கை எடுக்கவும்.குக்கரில் பேக் செய்யும் முறைகுக்கரை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு தட்டை வைக்கவும். குக்கர் மூடியை, தலைகீழாக மூடவும். பத்து நிமிடத்தில் குக்கர் நன்றாகச் சூடானதும், உள்ளே எந்த நீர்த் துளிகளும் இல்லை என்ற நிலையில், ரெடி செய்த கேக் பேனை, குக்கரின் உள்ளே உள்ள பிளேட்டின் மேல் வைக்கவும். மறுபடியும் மூடியைத் தலைகீழாக வைத்து மிதமான தீயில் 45 நிமிடங்கள்  வேகவிடவும். பிறகு, மூடியை எடுத்துவிட்டு, டூத் பிக்கால் கேக் வெந்துவிட்டதா என்று குத்திப்பார்க்கவும். டூத் பிக்கில் மாவு ஒட்டினால், கூடுதலாக 10 நிமிடங்கள் தலைகீழாக மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பிறகு, பேனில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.குறிப்புகுக்கரில் நீர் சேர்க்கத் தேவையில்லை. இது பேக் செய்வது, நீரில் வேகவைப்பது அல்ல.அவனில் பேக் செய்யும்  முறை பேக்கிங் அவனை 10 நிமிடங்கள் ப் ப்ரீ-ஹீட் ரீ-ஹீட்செய்யவும். 175°C அல்லது 180 °Cல் டெம்பரேச்சர் செட் செய்யவும். அவனின் உள்ளே இருக்கும் இரண்டு ராட்களையும் ப்ரீ ஹீட்டின் போது ஆன் செய்ய வேண்டும். பிறகு நடுவில் உள்ள டிரேவில் ரெடி செய்து வைத்த கேக் பேனை வைத்து, 40-50 நிமிடங்கள் பேக் செய்யவும் (கேக் பேனின் அளவைப் பொறுத்து நேரம் மாறுபடும்).செர்ரி அண்ட் ஃப்ரூட் ஜெல்லி (அகர் அகர் (agar agar) பயன்படுத்திச் செய்வது) அகர் அகர் – 5 கிராம் மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ் – அரை டீஸ்பூன் சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் பச்சை நிற ஃபுட் கலர்  – ஒரு சிட்டிகை.செர்ரி ஜாம் செய்ய எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் ஃப்ரெஷ் செர்ரி (கிடைக்கவில்லை என்றால் பிளம்ஸ் பயன்படுத்தலாம்) – 100 கிராம்  சர்க்கரை – 5 டேபிள்ஸ்பூன்.ஜெல்லி செய்முறைஅகர் அகரை தண்ணீரில் கழுவி, அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாகக் கரைய, நேரம் எடுக்கும். கரையும்வரை காத்திருக்கவும். கரைந்ததும், சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி, மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி, மோல்டு அல்லது கப்பில் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும்.ஃப்ரிட்ஜில் வைக்கலாம். வெளியே வைத்தாலும் செட் ஆகிவிடும். அதுதான் அகர் அகரின் தன்மை. சாக்லேட் குக்கீஸ் நாட்டுச்சர்க்கரை குக்கீஸ்என்னென்ன தேவை?வெண்ணெய் – 100 கிராம், நாட்டுச் சர்க்கரை – 75 கிராம், மைதா – 200 கிராம், பேக்கிங் பவுடர் 1/2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன், தண்ணீர் – 1 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?மைதா, நாட்டுச் சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து அதில் வெண்ணெய், தண்ணீர், வெனிலா எசன்சை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். பிறகு அதை சப்பாத்தி வடிவத்தில் திரட்டி குக்கீஸ் கட்டர் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்து அவனில் 1500oC 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான நாட்டுச் சர்க்கரை குக்கீஸ் ரெடி.குறிப்பு: ப்ரீ-ஹீட் 1500oC 10 நிமிடம் செய்ய வேண்டும்.டேட்ஸ் குக்கீஸ்என்னென்ன தேவை?மைதா – 100 கிராம், வெண்ணெய் – 100 கிராம், டேட்ஸ் – 10 nos. பிரவுன் சுகர் – 100 கிராம், வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், டேட்ஸ் சிரப்பு – 20 மி.லி.கிராம்.எப்படிச் செய்வது?ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், டேட்ஸ் சிரப்பு, வெனிலா எசன்ஸ் பீட் செய்துகொள்ளவும். பிறகு மைதா, பிரவுன் சுகர், பேக்கிங் பவுடரை சலித்து எடுத்து வெண்ணெய் உடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். டேட்ஸ்-சை சிறிது சிறிதாக கட் செய்து பிசைந்த மாவுடன் சேர்க்கவும். திரட்டிய மாவை குக்கீஸ் கட்டரைக் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். பிறகு, ப்ரீ-ஹீட் செய்த அவனில் 3000oC- 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான டேட்ஸ் குக்கீஸ் ரெடி.குறிப்பு: ப்ரீ-ஹீட் 2500oC – 10 நிமிடம் செய்ய வேண்டும்….

The post நினைத்தாலே இனிக்கும் கிறிஸ்துமஸ் கேக், குக்கீஸ் appeared first on Dinakaran.

Tags : Christmas ,New Year ,Dinakaran ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?