×

ஆசிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

புதுடெல்லி: ஆசிய பணக்காரர்களின் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ஆசிய பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் எண்ணெய் சுத்திகரிப்பு முதல் தொலைத்தொடர்பு வரை பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.6 சதவீதம் உயர்ந்து 4,430 கோடி டாலராக (சுமார் 3 லட்சம் கோடி) உள்ளது.

இதன்மூலம், அலிபாபா நிறுவனங்களில் தலைவர் ஜாக்-மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி. அமெரிக்க வர்த்தக முடிவில் ஜாக்-மாவின் சொத்து மதிப்பு 4,400 கோடி டாலராக (சுமார்2.99 லட்சம் கோடி) என அலிபாபா நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. பெட்ரோலிய சேமிப்பு திறன் அதிகரிப்பு மற்றும் ஜியோ அசுர வளர்ச்சியால் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 400 கோடி டாலராக (சுமார் 27,200 கோடி) அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது