×

நாட்டில் முதல் முறையாக கர்நாடகாவில் மரம் மீது நடக்கும் கேனோபி வாக்

வடகனரா: உலகில் பல வளர்ந்த நாடுகளில் மரங்கள் மீது நடக்கும் ‘கேனோபி வாக்’  என்ற பயிற்சி உள்ளது போல், இந்தியாவில் முதல் முறையாக  கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலத்தின் கடலோர பகுதியில் உள்ள வடகனரா  மாவட்டம், தாண்டேலி வனப்பகுதியில் குவேசி கிராமம் உள்ளது. இதன் அருகே அடர்ந்த  வனப்பகுதி உள்ளது. இதில், மிகவும் உயரமான மரங்கள் உள்ளன. இவற்றில் 30 அடி  உயரத்தில் உள்ள மரங்களில், ‘கேனோபி வாக்’ அமைக்கப்பட்டுள்ளது. ஒரே உயரத்தில்  உள்ள மரங்களை தேர்வு செய்து, 240 மீட்டர் நீளத்துக்கு கேனோபி வாக்  அமைக்கப்பட்டுள்ளது.குவேசி அருகில் தூத் சாகர் நீர் வீழ்ச்சி அருகில்  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே கேனோபி வாக் தொடங்கப்பட்டது. ஆனால்,  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த பகுதிக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள்  பயன்படுத்த முடியாமல் இருந்தது. இப்பகுதிக்கு வர சுற்றுலா  பயணிகளுக்கும் அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது, கேனோபி வாக் செல்ல  சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதே பகுதியில்  உள்ள கணேஷ் குடி பகுதியில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நீர் சரக்கு விளையாட்டுகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே தற்போது கேனோபி வாக் வசதிகள் உள்ளன….

The post நாட்டில் முதல் முறையாக கர்நாடகாவில் மரம் மீது நடக்கும் கேனோபி வாக் appeared first on Dinakaran.

Tags : Canobi Walk ,Karnataka ,India ,Walk ,
× RELATED இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை...