×

குஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதம் மாறினர் : பாஜக அரசின் மோசமான நடவடிக்கையால் மதம் மாற்றம்...எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

குஜராத் மாநிலம் உனா கிராமத்தில் பசு காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியதற்கு பாரதிய ஜனதா அரசின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குஜராத்தில் மோடா சமாதியா கிராமத்தில் சுமார் 300 தலித்துகள் புத்த மதத்திற்கு மாறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் புத்த மத குரு மத ரீதியான சடங்குகளை நடத்தி தங்கள் மதத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டார். அப்போது மதம் மற்றும் சாதி ரீதியான வேறுபாடுகளை தொடரமாட்டோம் என்று அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டில் உனா கிராமத்தில் இறந்த பசுவின் தோலை உரித்ததாக குற்றம் சுமத்தி 4 தலித் இளைஞர்களை பசு காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த நிகழ்ப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏமாற்றம் அடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக புத்த மதத்திற்கு மாறினர். பாரதிய ஜனதா அரசின் மோசமான நடவடிக்கைகளால் தான் மதம் மாற்றம் அதிகளவில் நிகழ்வதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags :
× RELATED செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக...