×

நாகையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பொதுமக்கள் மடக்கினர்; 3 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடுகச்சேரியில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு நேற்றுமுன்தினம் நள்ளிரவு டாரஸ் லாரி ஒன்று நின்றிருந்தது. இதை பார்த்த கிராமமக்கள் விசாரிக்கவே, அதிலிருந்த இருவர் இறங்கி தப்பியோடினர். அவர்களை விரட்டிச்சென்று பிடித்து, லாரியை சோதனை செய்தபோது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வெள்ளிமான் பகுதியை சேர்ந்த டிரைவர் சிஜூராஜன் (39), சூறைநாடு ஆணையடி பகுதியை சேர்ந்த கிளீனர் சஜீவ் (33) என்பதும், கொல்லம் பகுதியை சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவர், வடுகச்சேரி உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து வாங்கிய அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி கேரளாவுக்கு கடத்த இருந்ததும் லாரியில் போலி நம்பர் பிளேட்டை உபயோகித்தததும் விசா ரணையில் தெரிந்தது. லாரியில் 350 மூட்டைகளில் 17,500 கிலோ (17 டன்) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர், கிளீனர், கூட்டுறவு அங்காடி நகர்வு பணியாளர் சோமசுந்தரம் (49) ஆகியோரை கைது செய்தனர்….

The post நாகையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பொதுமக்கள் மடக்கினர்; 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kerala ,Vadugacherry ,Velankanni, Nagai district ,Taurus ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு