×

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்!: ராணுவ வீரர்கள் தண்டிக்கப்படும் வரை இழப்பீட்டை ஏற்கமாட்டோம் என உயிரிழந்தோர் குடும்பத்தினர் உறுதி..!!

நாகாலாந்து: நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை அரசு வழங்கும் எந்தவொரு இழப்பீட்டையும் பெற மாட்டோம் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உறுதிபட தெரிவித்துள்ளனர். நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சுரங்க தொழிலாளர்கள் மீது கடந்த 4ம் தேதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த 14 பேரில் 12 பேர் மோன் மாவட்டத்தில் உள்ள ஒட்டிங் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இழப்பீட்டு தொகையின் ஒரு பகுதியாக 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் அம்மாநில அமைச்சர் பெயரிட்ட உரையில் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒட்டிங் கிராம நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது குறித்து ஒட்டிங் கிராம நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிசம்பர் 5ம் தேதி துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் இறுதி சடங்குகளை செய்யும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, மாநில அமைச்சர், பலியானோர் குடும்பத்துக்கு ரூ.18.30 லட்சத்தை வழங்கினார். அது அவர் தனிப்பட்ட அன்பின் காரணமாக கொடுக்கபட்டது என்று நினைத்தோம். பிறகுதான், அது அரசு அறிவித்த நஷ்ட ஈட்டின் முதல்கட்ட தவணை என்பது தெரிய வந்தது. சம்பவத்துக்குக் காரணமான இந்திய ராணுவப் படையின் 21வது துணை காமாண்டோவைச் சேர்ந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும், ஒட்டுமொத்த கிழக்குப் பகுதியிலிருந்தும், ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதுவரை அரசின் எந்த நிதியுதவியும் ஏற்படாது என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  …

The post நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்!: ராணுவ வீரர்கள் தண்டிக்கப்படும் வரை இழப்பீட்டை ஏற்கமாட்டோம் என உயிரிழந்தோர் குடும்பத்தினர் உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Nagaland gunfire incident ,Nagaland ,Dinakaran ,
× RELATED பரனூர் சுங்கச்சாவடியில் அதிரடி சோதனை;...