×

நாகர்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சூடுபிடித்த கேக் விற்பனை: 60 வகையான கேக்குகள் தயாரிப்பு; ஆர்வமுடன் வாங்கும் மக்கள்..!!

கன்னியாகுமரி: உலகமே  கொண்டாட ஆயுத்தமாகிவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வித விதவிதமான வடிவங்களில் பல்வேறு சுவைகளில் கேக் தயாரிப்புபணி  இரவுபகலாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால்கேக் விற்பனை சூடுபிடித்துள்ளது. நாகர்கோவிலில் இரவுபகலாக தயாரிக்கப்பட்டு வரும் பல்வேறு வகையிலான கேக்குகள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமல்லாது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டுவருகின்றன. பட்டர்பிளம் கேக், ரசமலாய் கேக், சாண்டாகிளாஸ் கேக், ரோஸ் ஆரஞ்சு வெல்வட், ரெயின்போ, ஸ்ட்ராபெர்ரி, பட்டர்பிளை உள்ளிட்ட அறுபது வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கேக் வகைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சாண்டாகிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிடுவதற்கான பொருட்கள் விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களின் விற்பனையும் அதிகளவில் உள்ளது. குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் சாக்லேட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதாக சாக்லேட் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.  …

The post நாகர்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சூடுபிடித்த கேக் விற்பனை: 60 வகையான கேக்குகள் தயாரிப்பு; ஆர்வமுடன் வாங்கும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Kannyakumari ,Christmas Festival ,
× RELATED வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது