×

நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு வகுப்பறைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி : நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவ துவங்கியது. இதனை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகுள் நடந்து வருகின்றன.அதேபோல், கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்படும் என தமிழக அரசு எற்கனவே தெரிவித்துள்ளது. இதனால், வரும் 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், வகுப்பறைகள் தூசி படிந்து காணப்படுகிறது. மேலும், பள்ளி வளாகங்களில் செடிகள் கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும், கழிப்பறைகள் சுகாதாரமின்றி காணப்படுகின்றன. இருக்ககைள் அனைத்தும் தூசி படிந்து காணப்படுகிறது.இதனை சரி செய்யும் பணிகள் மற்றும் சீரமைக்கும் பணிகளில் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர்கள் வகுப்பறைகளை கழுவி சுத்தம் செய்தனர். மேலும் இருக்கைகள், மேஜைகள் என அனைத்தையும் கழுவி சுத்தம் செய்தனர். பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா கூறுகையில்,“ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளி திறக்கப்படுகிறது. இதனால், வகுப்பறைகள் மற்றும் இருக்கைகள் தூசிபடிந்து காணப்பட்டன. அவைகளை சுத்தம் செய்து வருகிறோம். மேலும், ஒன்றரை ஆண்டுகள் கழித்து வரும் மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க அவர்களை சிறப்பான முறையில் வரவேற்கவும் தயாராகி வருகிறோம்’’ என்றார்….

The post நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு வகுப்பறைகள் தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை