×

நன்னடத்தை பிணை பத்திரம் மீறி ஒரு வாரத்தில் 8 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னையில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  உத்தரவின்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.அதன்படி, கடந்த 1.1.2022 முதல் 25.11.2022 வரை சென்னையில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 265 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 100 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்ற 59 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 442 குற்றவாளிகள்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 19.11.2022 முதல் 25.11.2022 வரையிலான ஒரு வாரத்தில் 15 குற்றவாளிகள், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல, ஒரு வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 2, கொளத்தூர் மற்றும் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டங்களில் தலா 1, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 8 பேர் கடந்த ஒரு வாரத்தில் செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை  விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post நன்னடத்தை பிணை பத்திரம் மீறி ஒரு வாரத்தில் 8 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Police ,Shankar Jiwal ,
× RELATED மயிலாடுதுறையில் மணிக்கூண்டு...