×

நத்தத்தில் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

நத்தம், பிப். 3: கோடை காலம் துவங்கவுள்ள நிலையில் கோழிகளுக்கு கோழி கழிச்சல் நோய் வர வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு இந்நோய் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாமினை தமிழகம் முழுவதும் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மண்டல இணை இயக்குனர் ராம்நாத் ஆலோசனையின் பேரில் உதவி இயக்குனர் முகமது அப்துல் காதர் வழிகாட்டுதலின்படி நத்தம் எம்ஜிஆர் நகரில் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் கால்நடை ஆய்வாளர் மாரிமுத்து அடங்கிய மருத்துவ குழுவினர் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் வரும் பிப்.14ம் தேதி வரை நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் இம்முகாம் நடைபெற உள்ளது என்றும், கிராமமக்கள் கோழிகளுக்கு தடுப்பூசிகள் போட்டு பயன்பெறுவதுடன் கோழிகளை பாதுகாத்து பொருளாதார இழப்புகளை தவிர்க்குமாறு கால்நடை துறையினர் கேட்டு கொண்டனர்.

 

The post நத்தத்தில் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Distemper ,Nadhali ,Natham ,Tamil Nadu government ,
× RELATED குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை