×

நடுரோட்டில் முட்டை திருடிய கான்ஸ்டபிள்: வீடியோவில் சிக்கி சஸ்பெண்ட்

சண்டிகர்: பஞ்சாப்பில் நடுரோட்டில் தள்ளுவண்டியில் முட்டை திருடிய ஹெட் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் ஆகி உள்ளார். பஞ்சாப் மாநிலம் பெதாப்கர் சாஹிப் நகரில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் பிரித்பால் சிங். இவர் சமீபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, கடைகளுக்கு முட்டை சப்ளை செய்பவர் சாலையோரம் தள்ளுவண்டியை  நிறுத்திச் சென்றுள்ளார்.அங்கு வந்த பிரித்பால் சிங், நைசாக இரண்டு முட்டைகளை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் மறைத்துக் கொண்டார். பின்னர், யாரும் பார்க்கிறார்களா என கவனித்து மீண்டும் 2 முட்டைகளை எடுத்து நைசாக பாக்கெட்டில்  வைத்தார். இதை அருகிலிருந்த ஒருநபர் மறைந்திருந்த செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டார். போலீஸ்காரர் ஒரு யூனிபார்மில் முட்டை திருடியது சமூக வலைதளங்களில் வைரலானது.இதைப் பார்த்த அம்மாநில காவல் துறை, காவலர் பிரித்பாலை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது….

The post நடுரோட்டில் முட்டை திருடிய கான்ஸ்டபிள்: வீடியோவில் சிக்கி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Punjab ,Bedapgarh Sahib, Punjab ,
× RELATED சீட் கொடுக்காததால் விரக்தி; நான்...