×

நடிகர் விஜய் பாபுவை 7ம் தேதி வரை கைது செய்ய தடை: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம், : படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூன் 2 (நேற்று) வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மேலும், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக விஜய் பாபுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் துபாயில் இருந்து கொச்சி திரும்பினார். காலை 11 மணியளவில் எர்ணாகுளம் டவுன் தெற்கு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத் தினர். அப்போது, நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டதாகவும், படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காததால் தன் மீது பொய்யான புகார் கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார். நேற்றும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அவருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து நேற்று காலை விஜய் பாபு மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.இந்நிலையில், நேற்று போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜய் பாபுவிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், வரும் 7ம் தேதிவரை விஜய் பாபுவை கைது செய்ய தடை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்டவரை பார்க்கவோ, சாட்சிகளை கலைக்கவோ கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது….

The post நடிகர் விஜய் பாபுவை 7ம் தேதி வரை கைது செய்ய தடை: கேரள ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vijay Babu ,Kerala High Court ,Thiruvananthapuram ,
× RELATED தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய...