×

தொடர் விடுமுறை காரணமாக களைகட்டிய சுற்றுலாத்தலங்கள்

ஊட்டி : தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டதால் சுற்றுலாத்தலங்கள் களைகட்டி காணப்பட்டன.நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மகிழ்விக்கும் வகையில் ஏப்ரல், ேம மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை இரண்டாவது சீசனும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. 2து ஆண்டாக மே மாதம் நடைபெற இருந்த கோடை விழாக்கள் ரத்து ெசய்யப்பட்டன.தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து 4 மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 23ம் தேதியில் இருந்து பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர். 2வது சீசனும் துவங்கியுள்ள நிலையில், சாரல் மழையுடன் இதமான காலநிலை நிலவி வருகிறது.கேரளாவில் கொரோனா மற்றும் நிபா வைரஸ் பாதிப்புகள் காரணமாக கேரள சுற்றுலா பயணிகள் வர கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் என்பதால் கேரளா மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை மட்டுமே காண முடிகிறது.  இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை காரணமாக 3 நாட்கள் விடுமுறை வந்ததால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது….

The post தொடர் விடுமுறை காரணமாக களைகட்டிய சுற்றுலாத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்