முசிறி: மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்த நிலையில் முசிறி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தொடரும் மின் வெட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்.முசிறி, தொட்டியம், தாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக சிப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டுவரும் நிலையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளார். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதால் முறையாக வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விவசாயிகள் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேவையான மின்சாரத்தை வழங்க உரிய நடவடிக்கையே எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். …
The post தொடர் மின்வெட்டால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை: appeared first on Dinakaran.