×

தேயிலை தோட்டத்தில் கரடி நடமாட்டம்

 

வால்பாறை, ஜூன் 24: வால்பாறை அடுத்துள்ள வில்லோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது அணலி எஸ்டேட். பரம்பிக்குளம் வால்பாறை பகுதியின் இணைப்பாக உள்ள இந்த எஸ்டேட்டில் தற்போது கரடிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வில்லோனி எஸ்டேட், வாட்டர் பால்ஸ், வேவர்லி, எஸ்டேட் பகுதிகளில் 4 முதல் 5 அடி வரை உள்ள செங்கரடிகள் முகாமிட்டுள்ளதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். வனத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கரடியின் பிடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

The post தேயிலை தோட்டத்தில் கரடி நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Valparai ,Anali Estate ,Villoni Valley ,Barambikulam ,Dinakaran ,
× RELATED வால்பாறையில் தென்மேற்கு பருவமழை எதிரொலி தேயிலை நாற்று நடவு பணி தீவிரம்