×

தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு மாடுகள்

கோத்தகிரி, ஜூலை 7: கோத்தகிரி அருகே கொட்டக்கம்பை பகுதியில் அதிகாலை நேரத்தில் குடியிருப்பு வளாகத்தில் புகுந்த சிறுத்தை நாயை தூக்கி சென்ற வீடியோ வெளியாகி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை கோத்தகிரி அருகே கொட்டக்கம்பை பகுதியில் வசித்து வரும் ரூபன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை நீண்ட நேரம் வீட்டின் வளாகத்தில் உலா வந்தது.
பின்னர், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சிறுத்தை நாயை தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,“சமீபகாலமாக இந்த பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரங்களில் சிறுத்தை, கரடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, கோழி ஆகியவற்றை வேட்டையாடி செல்கிறது. இதனால், நாங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறோம். இதுகுறித்து வனத்துறையிடம் பல முறை தெரிவித்துள்ளோம் ஆனால், எந்தவித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளோம். மனித வனவிலங்கு மோதல் ஏற்படுவதற்கு முன் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

இந்நிலையில், வனத்துறையினர் கொட்டக்கம்பை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பொது மக்கள் தனியாக வெளியில் வரவேண்டாம். வீட்டின் முன் மின் விளக்குகளை எரிய விடவேண்டும். வனவிலங்கு நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு மாடுகள் appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Kottakambai ,Nilgiri ,Kotagiri ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி...