×

பீகார் மாநிலத்தில் மோதிஹாரி பகுதியில் பேருந்து தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு

மோதிஹாரி: பீகார் மாநிலத்தில் மோதிஹாரி பகுதியில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாரும் எதிர்பாரத விதமாக திடீரென பேருந்து தீ பிடித்தது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடந்த அனைவரும் மருத்துவனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முஸாபர்பூரில் இருந்து பேருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத நேரத்தில் கவிழந்து விபத்திற்குள்ளான போது திடீரென தீப்பிடித்தது.

இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை கோட்வா பகுதியில் உள்ள மோக ஓட்டல் அருகே விபத்து நடந்தது. இந்த பேருந்தில் மொத்தம் 32 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்த பேருந்து தலைகீழாக கவிழந்து விபத்திற்குள்ளான போது தீ பிடித்து விபத்து ஏற்பட்டது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை...